செய்திகள்,திரையுலகம் ஆணழகன் போட்டியில் நடிகர் விக்ரம்!…

ஆணழகன் போட்டியில் நடிகர் விக்ரம்!…

ஆணழகன் போட்டியில் நடிகர் விக்ரம்!… post thumbnail image
சென்னை:-சென்னை மாவட்ட ஆணழகன் சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில ஆணழகன் சங்கம் இணைந்து சென்னையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் ஆணழகன் போட்டியை நடத்த உள்ளது. இப்போட்டியில் ஒன்பது உடல் எடை பிரிவாக நடக்கிறது. மாற்றுதிறனாளிகளுக்கான சுற்றும் உள்ளது. முதல் பரிசு ரூ25,000, இரண்டாம் பரிசு ரூ15,000 மூன்றாம் பரிசு ரூ10,000 வழங்கப்படுகிறது.

9 பிரிவிலும் சாம்பியன் பட்டம் பெற்றவர்களில் சிறந்த நபர் ஒருவருக்கு ‘ஸ்டீல் மேன் ஆப் தமிழ்நாடு 2015’ பட்டமும் ரூ. 5 லட்சமும் வழங்கப்படும். இந்த போட்டியின் பரிசளிப்பு விழாவிற்கு ஐ படத்தில் மிஸ்டர் தமிழ்நாடாக நடித்த நடிகர் விக்ரம் கலந்து கொள்ள உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி