செய்திகள் யூனியன் வங்கியின் புதிய கிளை ஆஸ்திரேலியாவில் தொடக்கம்!…

யூனியன் வங்கியின் புதிய கிளை ஆஸ்திரேலியாவில் தொடக்கம்!…

யூனியன் வங்கியின் புதிய கிளை ஆஸ்திரேலியாவில் தொடக்கம்!… post thumbnail image
சிட்னி:-அரசுத் துறை வங்கியான யூனியன் வங்கி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தனது புதிய கிளையை தொடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். யூனியன் பேங் ஆப் இந்தியாவின் பிரதிநிதி அலுவலகம் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இயங்கி வரும் நிலையில், தற்போது வருகிற ஜனவரி 30ம் தேதி தனது புதிய கிளையை சிட்னியில் தொடங்கவுள்ளதாகவும்,

சர்வதேச அளவில் தனது கால்தடத்தை பதிக்கும் நடவடிக்கையாக விரைவில் ஆப்பிரிக்காவில் புதிய கிளையைத் தொடங்க இருப்பதாகவும் இந்திய யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் அருண் திவாரி தெரிவித்துள்ளார். துபாய், ஹாங்காங், மற்றும் லண்டனில் கிளைகள் கொண்ட யூனியன் வங்கி சமீபத்தில் பெல்ஜியத்தில் தனது கிளையைத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி