சென்னை :- சிவகார்த்திகேயன் இன்று இந்த நிலைமையில் இருக்கிறார் என்றால் கண்டிப்பாக அதற்கு தனுஷும் ஒரு காரணம். ஆனால், தற்போது தனுஷையே இவர் முந்தும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் காக்கி சட்டை, இப்படத்தையும் தனுஷ் தான் தயாரித்துள்ளார்.
இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வரை 18 லட்சத்தை எட்டியுள்ளது.ஆனால், தனுஷின் அனேகன் படத்தின் ட்ரைலர் 17 லட்சத்தை தான் தொட்டுள்ளது, மேலும், வியாபாரத்திலும் சிவகார்த்திகேயன் கை கொஞ்சம் ஓங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி