சென்னை:-தற்போது பேஸ்புக்கை விட, டிவிட்டரில் தான் பிரபலங்கள் ராஜ்ஜியம் பெருகி வருகிறது. இதில் பிரபல நடிகைகள் திரிஷா, ஸ்ருதிஹாசன், சமந்தா, ஹன்சிகா போன்றவர்களுக்கு பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொடர்பாளர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் தான் ஹன்சிகாவிற்கும், சமந்தாவிற்கும் பத்து லட்சம் தொடர்பாளர்கள் வந்தார்கள்.
எனவே டுவிட்டர் ஹன்சிகா பெயருக்கும் பக்கத்தில் ஒரு டிக் மார்க் கொடுத்து அவருடைய பக்கத்தை உறுதிபடுத்தி இருந்தது. ஆனால் பத்து லட்சம் தொடர்பாளர்களை கொண்ட சமந்தாவிற்கு இன்னும் டுவிட்டர் பக்கம் உறுதிபடுத்தவில்லை. இதற்கு காரணம் சமந்தா முதல் கணக்கை ஆரம்பித்து விட்டு, உடனே அதை நீக்கி வேறொரு பக்கத்தை தொடங்கியதால் தான் இன்னும் அவருடைய டிவிட்டர் பக்கம் உறுதி படுத்தப்படவில்லை என்று கூறுகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி