செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் தெலுங்கானாவில் பன்றி காய்ச்சல் பலி 21 ஆக உயர்ந்தது!…

தெலுங்கானாவில் பன்றி காய்ச்சல் பலி 21 ஆக உயர்ந்தது!…

தெலுங்கானாவில் பன்றி காய்ச்சல் பலி 21 ஆக உயர்ந்தது!… post thumbnail image
நகரி:-தெலுங்கானாவில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2 வாரத்தில் மட்டும் 13 பேர் பலியானார்கள். 100–க்கும் மேற்பட்டோர் ஐதராபாத் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 5 பேர் பலியானார்கள். நேற்று மேலும் 3 பேர் உயிர் இழந்தனர். இதில் ஆந்திராவை சேர்ந்த 2 பேர் அடங்குவர்

ஐதரபாத்தில் உள்ள காந்தி அரசு ஆஸ்பத்திரி, உஸ்மானியா ஆஸ்பத்திரியில் மட்டும் 181 பேர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தெலுங்கானாவில்தான் பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பதால் அம்மாநில அரசு உஷார் அடைந்துள்ளது. முதல்–மந்திரி சந்திரசேகர ராவ் நேற்று அவசரமாக மந்திரி சபையை கூட்டி ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் கூறும்போது, பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த மத்திய மருத்துவக் குழுவை அனுப்பி வைக்கும்படி பிரதமரிடம் கேட்டு இருப்பதாக கூறினார்.

மேலும் மாநிலத்தில் பன்றி காய்ச்சல் பற்றி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சந்திரசேகரராவ் கேட்டுக் கொண்டதின் பேரில் மத்திய அரசு 3 பேர் கொண்ட சிறப்பு மருத்துவ குழுவை ஐதராபாத் அனுப்பி உள்ளது. மேலும் 10 ஆயிரம் தடுப்பு ஊசி மருந்துகளையும் அனுப்பி வைத்தது. பன்றி காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். அதே நேரத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டு உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி