டாவோஸ்:-ரஷியாவில் இருந்து பிரிந்து சென்ற நாடான உக்ரைனுக்கும், ரஷியாவுக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் வசிக்கும் ரஷிய ஆதரவாளர்களை தூண்டிவிட்டு உள்நாட்டு கலவரத்தை ரஷியா ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக கிரிமியா என்ற பகுதி உக்ரைனில் இருந்து பிரிந்து ரஷியாவுடன் இணைந்தது.
இதேபோல தொடர்ந்து பல பகுதிகளிலும் ரஷிய ஆதரவாளர்கள் உக்ரைனுக்கு எதிராக போராட வைத்துள்ளது. அவர்களுக்கு ஆதரவாக ரஷிய ராணுவம் உக்ரைனுக்குள் புகுந்திருப்பதாக உக்ரைன் அதிபர் பெட்ரோ பிரசன்கோ கூறியிருக்கிறார். தற்போது 9 ஆயிரம் ரஷிய ராணுவ வீரர்கள் எங்கள் பகுதிக்குள் புகுந்துள்ளனர். 500 ரஷிய டாங்கிகளும், சக்தி வாய்ந்த ஆயுதங்களும் எங்கள் பகுதிக்குள் குவிக்கப்பட்டுள்ளன என குற்றம் சாட்டியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி