சென்னை:-ஆஸ்கார் ரவிசந்திரன் தயாரிப்பில் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் ஐ படம் ஜனவரி 14ம் தேதி வெளியானது ‘ஐ’. உலகம் முழுவது இப்படம் 5 ஆயிரம் தியேட்டர்களில் வெளியிடபட்டது. இந்த படம் உலகம் முழுவதும் முதல் ஒரு வாரத்தில் (5 நாட்கள்) ரூ.135 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில் வினியோகஸ்தர்களின் பங்கு 70 கோடியாகும். விக்ரமின் முந்தைய படங்கள் இதுபோன்று வசூல் சாதனை நிகழ்த்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தென் இந்திய பாக்ஸ் ஆபீசில் ஆல்-டைம் டாப் 10 சினிமாக்களில் விக்ரமின் ஐ படமும் 6 வது இடத்தை பெற்று உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி