செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் கடலில் விழுந்த மலேசியா விமானத்தை தீவிரவாதிகள் தாக்கவில்லை!…

கடலில் விழுந்த மலேசியா விமானத்தை தீவிரவாதிகள் தாக்கவில்லை!…

கடலில் விழுந்த மலேசியா விமானத்தை தீவிரவாதிகள் தாக்கவில்லை!… post thumbnail image
ஜகர்த்தா:-இந்தோனேசியாவின் சுரபயாவில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்ற மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 162 பேரும் பலியாகினர். இந்த விபத்து நடந்தது எப்படி என தெரியவில்லை. தீவிரவாதிகள் கடத்தி சென்று விபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்ற கருத்து நிலவியது. அதே நேரத்தில் மோசமான வானிலை காரணமாக விபத்து நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.

எனவே, விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்தால் தான் விபத்துக்கான மர்மம் தெரியவரும் என கருதப்பட்டது. அதன்படி விமானத்தின் உடைந்த பாகங்களுடன் கருப்பு பெட்டிகளும் மீட்கப்பட்டன. அதில் உள்ள ‘வாய்ஸ் ரெக்கார்டர்’ பரிசோதிக்கப்பட்டது.அப்போது அதில் விமானிகளின் குரல் தவிர வேறு நபர்களின் குரல்கள் எதுவும் பதிவாகவில்லை. எனவே, மலேசிய விமானத்தை தீவிரவாதிகள் கடத்தி தாக்கவில்லை என்பது உறுதியாகி விட்டது. அதே நேரத்தில் விமானத்தை சரியான நிலைக்கு கொண்டு வந்து சிக்னல்களை பெறுவதில் விமானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டதும் தெரிய வந்துள்ளது. ஒருவேளை மோசமான தட்பவெப்பநிலை காரணமாக விமானத்தின் என்ஜின்கள் செயலிழந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

விமானம் புறப்பட்ட 2 மணி நேர குரல்பதிவு கருப்பு பெட்டியில் பதிவாகியுள்ளது. அதில் பாதி அளவுதான் பரிசோதிக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை வருகிற 28ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதுவரை பரிசோதிக்கப்பட்டதில் தீவிரவாதிகள் அச்சுறுத்தலோ, தாக்குதலோ இல்லை என இந்தோனேசிய போக்குவரத்து பாதுகாப்பு கமிட்டி அதிகாரி ஆண்ட்ரஸ் ஹனான்டோ தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி