இதற்கு கண்டனம் தெரிவித்த பா.ஜனதா கட்சியை சேர்ந்த மீனாட்சி லேகி எம்.பி., அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த பேச்சு தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகளை கேள்வி கேட்பதாக உள்ளது என்றார். இதுதொடர்பாக காங்கிரஸ் செயலாளர் (சட்டப்பிரிவு) கே.சி.மிட்டல் தலைமை தேர்தல் கமிஷனர் பிரம்மா, தேர்தல் கமிஷனர் முகம்மது சைதி ஆகியோரிடம் நேற்று புகார் கொடுத்தார். அந்த புகார் மனுவில், அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த பேச்சு, மக்களை ஓட்டு போடுவதற்கு லஞ்சம் பெற தூண்டுவதாக உள்ளது. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல். தேர்தலை நேர்மையாக நடத்தும் தேர்தல் கமிஷனுக்கு அவதூறு கற்பிக்கும், பழி தூற்றும் செயல். இதற்காக அவர் மீது குற்ற நடவடிக்கை கூட எடுக்க முடியும். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அஜய்மக்கான் நிருபர்களிடம் கூறும்போது, அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த பேச்சு தேர்தல் விதிகளை மீறியது மட்டுமல்ல, டெல்லி மக்களை அவமானப்படுத்தும் செயல். மக்களை லஞ்சம் வாங்க தூண்டுகிற குற்றமாகும். எனவே அவர் மீது தேர்தல் கமிஷனில் புகார் கூறியுள்ளோம் என்றார். அரவிந்த் கெஜ்ரிவால் மீது தேர்தல் கமிஷனில் கொடுக்கப்பட்ட 2-வது புகார் இது என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி மாநில பா.ஜனதா தலைவர் சதிஷ் உபாத்யாய் ஏற்கனவே அவர் மீது ஒரு புகார் கொடுத்தார். தன் மீது ஊழல் குற்றச்சாட்டுகளையும், பா.ஜனதா கட்சி மத வன்முறையை தூண்டுகிறது என்றும் அடிப்படை ஆதாரமற்ற, நிரூபணம் இல்லாத தகவல்களை கூறியதாக அரவிந்த் கெஜ்ரிவால் மீது உபாத்யாய் புகார் கொடுத்தார்.இதுதொடர்பாக 20ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் கமிஷன் கடந்த 17ம் தேதி நோட்டீசு அனுப்பியது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி