சென்னை:-நடிகைகள் பலர் வெளிநாட்டுக்காரருடன் காதல் வயப்பட்டு சுற்றுவதாக கிசுகிசுக்கள் பரவியுள்ளன. இன்னும் சிலர் வெளிநாட்டில் உயர் பதவிகளில் இருப்பவர்களை மணந்து அவருடன் அங்கேயே செட்டில் ஆகி விடுகின்றனர். சினிமாவை விட்டும் விலகி விடுகிறார்கள். பிறகு அவர்கள் எங்கு இருக்கிறார்கள். சந்தோஷமாக குடும்பம் நடத்துகிறார்களா?… என்ற எந்த விவரமும் தெரிவது இல்லை. இவர்கள் மத்தியில் காஜல் அகர்வால் வித்தியாசமாக இருக்கிறார். வெளிநாட்டு மாப்பிள்ளைகளை வெறுக்கிறார். அவர் கூறியதாவது:–
எனக்கு வெளிநாட்டு மாப்பிள்ளையை பிடிக்காது. அவர்களுடன் டேட்டிங் போனதும் கிடையாது. நான் இந்திய பெண். இந்தியர் ஒருவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன். வெளிநாட்டவர்கள் கிளப் மற்றும் பப்களிலேயே மூழ்கி கிடக்கிறார்கள். அவர்களுக்கு நமது கலாசாரம் தெரியாது. நமது வாழ்க்கை முறையையும் அறியாதவர்கள். அப்படிப்பட்டவர்களை மணந்தால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது. எனவேதான் வெளிநாட்டு மாப்பிள்ளையை விரும்புவது இல்லை. அவர்களுடன் காதல் வயப்பட்டதும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி