செய்திகள் பாகிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் 6 தீவிரவாதிகள் பலி!…

பாகிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் 6 தீவிரவாதிகள் பலி!…

பாகிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் 6 தீவிரவாதிகள் பலி!… post thumbnail image
இஸ்லாமாபாத்:-பாகிஸ்தானில் வன்முறை தாக்குதல்களால் அமைதியிழந்து காணப்படும் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம், தீவிரவாதிகளை வேட்டையாடி வருகிறது. அதேசமயம் அமெரிக்காவும் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

இந்நிலையில், வடக்கு வசிரிஸ்தானின் ஷாஹி கேல் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ. இன்று அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 4 பேர் படுகாயமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் எந்த தீவிரவாதக்குழுவை சேர்ந்தவர்கள்?… என்பது தெரியவில்லை. இன்றைய தாக்குதல் நடந்த பகுதி அல் கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்துள்ள தலிபான்களின் ஹபிஸ் குல் பகதூர் பிரிவை சேர்ந்தவர்களின் ஆதிக்கத்தில் உள்ள இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி