குறிப்பாக சோனியாவின் குழந்தைப்பருவம், பள்ளிக்கூட வாழ்க்கை, ராஜீவுடனான சந்திப்பு மற்றும் காதல், பிரதமர் பதவியை ஏற்க மறுத்தது வரையிலான அனைத்து தகவல்களும் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது சோனியா மற்றும் அவரது குழந்தைகள் அடைந்த வேதனை மற்றும் பல்வேறு சம்பவங்களை இந்த புத்தகம் விரிவாக அலசுகிறது.
கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த படுதோல்வி தகவலுடன் நூல் நிறைவடைகிறது. மொத்தத்தில் சோனியா ஒரு ‘அசாதாரண பெண்’ என நூலில் கூறப்பட்டு உள்ளது.ஆனால் இந்த நூலில் சோனியா பற்றிய தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறி காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த நூல் நேற்று வெளியிடப்பட்டது.இந்த நூலுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவிக்க காரணம் என்ன?… என்று ஆசிரியர் ஜேவியர் மரோவுடன் கேட்ட போது, ‘அதை அவர்களிடமே கேளுங்கள்’ என்று பதிலளித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி