செய்திகள் இடைவிடாமல் இன்டர்நெட் வீடியோ கேம் விளையாடிய வாலிபர் மரணம்!…

இடைவிடாமல் இன்டர்நெட் வீடியோ கேம் விளையாடிய வாலிபர் மரணம்!…

இடைவிடாமல் இன்டர்நெட் வீடியோ கேம் விளையாடிய வாலிபர் மரணம்!… post thumbnail image
தைபே:-தைவான் நாட்டில் வசித்து வரும் சியே என்ற வாலிபர், கௌசியுங் நகரில் உள்ள இன்டர்நெட் கபே ஒன்றிற்கு வீடியோ கேம் விளையாட வருவது வழக்கம். தினமும் வருவதால் அங்குள்ள ஊழியர் முதல் மேனேஜர் வரை அனைவருடனும் அவருக்கு நல்ல பழக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் இன்டர்நெட் கபேக்கு நேற்று வந்த சியே தனது இருக்கையில் அசைவற்றுக்கிடந்தார்.

வழக்கமாக வீடியோ கேம் விளையாடிய அசதியில் சியே அப்படி தூங்குவார் என்பதால், அவரை பார்த்த ஊழியர்கள் அவர் தூங்கிக்கொண்டிருக்கிறார் என்றே நினைத்தனர். ஆனால் நீண்ட நேரமானதால் சந்தேகமடைந்த ஊழியர்கள் அவர் அருகே சென்று சோதித்தனர். அப்போது அவரது மூச்சு நின்றுபோனதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் சியேவின் இதயம் செயலிழந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் 32 வயதான சியே தொடர்ந்து மூன்று நாட்களாக தொடர்ந்து வீடியோ கேம் விளையாடியதே அவரது மரணத்திற்கு காரணமென்றும் தெரிவித்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி