செய்திகள்,திரையுலகம் ‘ஐ’ படத்தின் வசூல் விவரம்!…

‘ஐ’ படத்தின் வசூல் விவரம்!…

‘ஐ’ படத்தின் வசூல் விவரம்!… post thumbnail image
சென்னை:-கடந்த 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வரும் படம் ஐ. வசூல் சாதனை படைத்து வரும் இப்படம் தமிழகத்தில் மட்டும் 600க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் இப்படம் முதல் 3 நாளில் 30 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாம். ஆந்திராவில் வெளியான ஐ இதுவரை அங்கு வெளியான அத்தனை தமிழ் படங்களின் வசூலையும் முறியடித்துள்ளதாம். அங்கு ஐ மூன்று நாட்களில் 25 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கேரளாவில் 220க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகியுள்ள ஐ 3 நாட்களில் 6.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். கர்நாடகாவை பொறுத்தவரை 3 நாட்கள் கலெக்ஷன் 5 கோடி என்று கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி