இந்த வெற்றியில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் இது ரோஜர் பெடரரின் 1000-வது சர்வதேச (ஏ.டி.பி.) வெற்றியாகும். 1998-ம் ஆண்டு பிரான்சின் குலாவ்மி ராவ்க்சுக்கு எதிராக தனது வெற்றிக் கணக்கை தொடங்கிய பெடரர் இப்போது புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறார்.உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் 33 வயதான பெடரர் ‘ஓபன் எரா’ வரலாற்றில் (அமெச்சூர் வீரர்களுடன் தொழில்முறை வீரர்களும் பங்கேற்க அனுமதிக்கப்பட்ட 1968-ம் ஆண்டில் இருந்து) ஆயிரம் வெற்றிகளை சுவைத்த 3-வது வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
ஏற்கனவே அமெரிக்காவின் ஜிம்மி கானோர்ஸ் (1,253 வெற்றி), இவான் லென்டில் (1,071 வெற்றி) ஆகியோர் இந்த இலக்கை கடந்துள்ளனர். இது எனக்கு சிறப்பு வாய்ந்த நாள் என்று வர்ணித்த பெடரர், இந்த நாளை ஒரு போதும் மறக்க மாட்டேன் என்றும் குறிப்பிட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி