நேற்று விமானத்தின் இரண்டு கருப்பு பெட்டிகளில் ஒன்று மீட்கப்பட்ட நிலையில் இன்று மற்றொரு கருப்பு பெட்டியும் மீட்கப்பட்டது. அதே போல் கடலுக்கடியில் 98 அடி ஆழத்தில் கிடந்த விமானத்தின் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டரும் இன்று அதிகாலை மீட்கப்பட்டதாக அந்நாட்டு போக்குவரத்து துறையின் கடற்பயணங்களுக்கான இயக்குனர் டோனி புடியோனோ கூறினார். அவர் மேலும் கூறுகையில், ‘கடவுளுக்கு நன்றி. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை செய்பவர்களுக்கு இது நல்ல செய்தி’ என்றார்.
இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவுக்கு கொண்டு செல்லப்படும் 2வது கருப்பு பெட்டி ஏற்கனவே கொண்டு செல்லப்பட்ட முதல் கருப்பு பெட்டியில் உள்ள தகவல் தொகுப்புகளுடன் பகுப்பாய்வு செய்யப்படும். பின்னர் அதில் உள்ள விமானி மற்றும் இணை விமானி ஆகியோருக்கிடையே நடைபெற்ற உரையாடல்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படும். அதே போல் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டரின் மூலம் விமானிகளுக்கும், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல்கள் மற்றும் வெடிவிபத்து ஏற்பட்டதா என்பது பற்றிய விவரங்களும் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி