அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் பாரீஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஒபாமா அஞ்சலி!…

பாரீஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஒபாமா அஞ்சலி!…

பாரீஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஒபாமா அஞ்சலி!… post thumbnail image
வாஷிங்டன்:-பிரான்சு தலைநகர் பாரீசில் இயங்கி வரும் ‘சார்லி’ வாரப்பத்திரிகை அலுவலகத்தில், கடந்த 7ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன.

இந்நிலையில் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நேற்று அஞ்சலி செலுத்தினார். வாஷிங்டனில் அமைந்துள்ள பிரெஞ்சு தூதரகத்துக்கு இதற்காக நேரில் சென்ற அவர், அங்கு வைக்கப்பட்டிருந்த அஞ்சலி புத்தகத்தில், பிரெஞ்சு மக்களுக்கு அமெரிக்காவின் அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதாக எழுதி கையெழுத்திட்டார்.

மேலும், இந்த தாக்குதலுக்கு நீதி கிடைப்பதற்காக பிரெஞ்சு சகோதரர்களுடன் இணைந்து போராடுவோம் என்று குறிப்பிட்ட அவர், சுதந்திரத்துக்கும், உயர் கொள்கைகளுக்கும் எதிரான தீவிரவாதத்தை எதிர்த்து இணைந்து முன்செல்வோம் என்றும் எழுதினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி