அமிர்தசரஸ்:-பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் மாதியாலாவில் அரசு பள்ளி உள்ளது. இங்கு ஓவிய ஆசிரியராக வேலை பார்ப்பவர் ஹர்ஜித்கவுர். 7ம் வகுப்புக்கு பாடம் நடத்த சென்ற போது அவரது பர்சில் இருந்த 500 ரூபாய் மாயமானது. மாணவிகள்தான் திருடியிருக்க வேண்டும் என்று சந்தேகம் கொண்டார். இதனை மாணவிகள் மறுத்த போதிலும் அவர் கேட்கவில்லை.
ஒவ்வொரு மாணவியை அவர் சோதனையிட்டார். 13 மாணவிகளை வரிசையாக நிற்கவைத்து அவர்களது ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி சோதனையிட்டார். இதனால் அவமானம் அடைந்த மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். அவர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஆசிரியர் ஹர்ஜித் கவுரை தேடி வருகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி