செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ஒருநாள் தரவரிசையில் விராட் கோலி முன்னேற்றம்!…

ஒருநாள் தரவரிசையில் விராட் கோலி முன்னேற்றம்!…

ஒருநாள் தரவரிசையில் விராட் கோலி முன்னேற்றம்!… post thumbnail image
துபாய்:-ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் வீரர்கள் தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சிறப்பாக விளையாடி வரும் வீராட் கோலி ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசையில் 862 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். டி வில்லியர்ஸ் 25 புள்ளிகள் அதிகம் பெற்று முதல் இடத்தில் உள்ளார். இந்திய வீரர்கள் தவான் 777 புள்ளிகள் பெற்று 5-வது இடத்திலும், டோனி 10-வது இடத்திலும் உள்ளனர்.

பந்து வீச்சில் புவனேஸ்குமார் 8-வது இடத்திலும், ஜடேஜா 9-வது இடத்திலும் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் வீரர் சுனில் நரைன் 753 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் வீரர் சயீத் அஜ்மல் 751 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திலும், ஸ்டெய்ன் 699 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளனர். ஆல் ரவுண்டர் தர வரிசையில் ஜடேஜா 6-வது இடத்தில் உள்ளார். அணிகளில் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்கா 3-வது இடத்திலும் உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி