இப்படி தமிழர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எனக்கு ஓட்டு போடாததால் நான் தோல்வி அடைய நேரிட்டது. தமிழர்களால் நான் தோற்கடிக்கப்பட்டு இருக்கிறேன். தமிழர்களின் வாக்குகளால் கிடைத்த இந்த தோல்வியை என்னால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள இயலாது. இதனை நான் ஒரு தோல்வியாகவே கருதவில்லை. நான் அதிபர் தேர்தலில் தோற்றாலும் சிங்களர்களிடம் உள்ள ஆட்சி அதிகாரம் போய்விடவில்லை. எனவே என் தோல்வியால் தமிழர்களுக்கு எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. இவ்வாறு ராஜபக்சே ஆத்திரத்துடன் கூறினார்.
ஈழத்தில் உள்ள தமிழர்களுக்கு எந்த உரிமையும் கிடைக்க விட மாட்டேன். நல்லது செய்ய மாட்டேன் என்பதை மறைமுகமாக உணர்த்துவது போல ராஜபக்சேயின் திமிர் பேச்சு அமைந்துள்ளது.
இதற்கிடையே ராஜபக்சேக்கு கட்சியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை அவரிடம் இருந்து பறிக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி