செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய்க்கு திருப்புமுனை தந்த ‘கத்தி’ திரைப்படம்!…

நடிகர் விஜய்க்கு திருப்புமுனை தந்த ‘கத்தி’ திரைப்படம்!…

நடிகர் விஜய்க்கு திருப்புமுனை தந்த ‘கத்தி’ திரைப்படம்!… post thumbnail image
தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் முன்னணியில் இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடித்தாலே அந்த படம் மினிமம் கேரண்டி தான் தயாரிப்பாளர்களுக்கு, அதிலும் சில வருடங்களாக இவர் நடிப்பில் வெளிவரும் படங்கள் எளிதாக ரூ 100 கோடி வசூல் செய்கிறது.

ஆனால், இந்த படங்கள் அனைத்தும் கமர்ஷியல் என்ற வட்டத்துக்குள் வந்தாலும் விஜய்யின் நடிப்பு பெரிதாக பேசப்படவில்லை. இதை கடந்த வருடம் வந்த கத்தி திரைப்படம் முறியடித்துள்ளது. கத்தி படம் விஜய்யின் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல் என்று கூட சொல்லலாம். ஏனெனில் படம் வர்த்தக ரீதியில் பெரிய வெற்றி அடைந்தது மட்டுமின்றி கதை, திரைக்கதை, நடிப்பு என அனைத்திலும் கவர்ந்தது.

விஜய் ஜீவானந்தம், கதிரேசன் என இரண்டு கதாபாத்திரங்களில் கலக்கியிருப்பார். கதிரேசன் மாஸ், என்றால் ஜீவானந்தம் கிளாஸ் நடிப்பை வெளிப்படுத்தினார். நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜீவானந்தம் கதாபாத்திரத்தின் மூலம் விஜய் மிகவும் தேர்ந்த நடிப்பை கொண்டு வந்தார் ஸ்கிரீனில். இதுவரை பேவரட் என்ற வரிசையிலேயே விஜய் விருது வாங்கி வந்தார். ஆனால், இந்த முறை கண்டிப்பாக பெஸ்ட் என்ற வரிசையில் கத்தி படத்திற்கு விஜய்க்கு விருது கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி