அரசியல்,செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் தோல்வியை ஒப்புக்கொண்டார் ராஜபக்சே: அதிபர் மாளிகையிலிருந்தும் வெளியேறினார்!…

தோல்வியை ஒப்புக்கொண்டார் ராஜபக்சே: அதிபர் மாளிகையிலிருந்தும் வெளியேறினார்!…

தோல்வியை ஒப்புக்கொண்டார் ராஜபக்சே: அதிபர் மாளிகையிலிருந்தும் வெளியேறினார்!… post thumbnail image
கொழும்பு:-இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு, தோல்வியை ஒப்புக்கொள்வதாக அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார். அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுடன் தொலைபேசியில் உரையாற்றிய பின்னர், அதிபர்கள் வசிக்கும் அலரி மாளிகையை விட்டு ராஜபக்சே வெளியேறினார். மேலும் புதிய அதிபர் மைத்ரிபால சிறீசேனாவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று மாலை எண்ணப்பட்டது. இதில் தொடக்கத்தில் இருந்தே மைத்ரிபால சிறீசேனா முன்னிலை வகித்து வந்தார். இன்று காலை 8 மணி நிலவரப்படி சிறீசேனா சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். சிறீசேனாவிற்கு 28,22,788 வாக்குகளும், ராஜபக்சேவிற்கு 25,27,876 வாக்குகளும் கிடைத்துள்ளது. குறிப்பாக தமிழர் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ராஜபக்சே பெரும் பின்னடைவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி