கேப்டன் பதவியில் 3–வது செஞ்சூரியை எடுத்தார். அடிலெய்டு டெஸ்டில் அவர் முதல் முறையாக கேப்டன் பொறுப்பை ஏற்றார். கேப்டன் பதவியில் அவர் சந்திக்கும் 2–வது போட்டி சிட்னி டெஸ்ட் ஆகும். 33–வது டெஸ்டில் விளையாடும் வீராட் கோலிக்கு இது 10–வது சதமாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 6–வது செஞ்சூரியை பதிவு செய்தார். மேலும் இந்த டெஸ்ட் தொடரில் கோலி 630 ரன்னுக்கு மேல் எடுத்து புதிய சாதனை படைத்தார்.
இதற்கு முன்பு ராகுல் டிராவிட் 4 டெஸ்டிலும் சேர்த்து (8 இன்னிங்ஸ்) 619 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது. இதை கோலி முறியடித்தார். அவர் 4 டெஸ்டில் 7 இன்னிங்சில் 630 ரன்னுக்கு மேல் எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக ரன் எடுத்த இந்தியர் என்ற சாதனையை புரிந்தார். இதில் 4 சதமும், ஒரு அரை சதமும் அடங்கும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி