‘வெளியே போ’ என்பது போல் அவரது செய்கை அமைந்தது. இதனால் விஜய் இறுக்கமான முகத்துடன் நடையை கட்டினார். ஸ்டார்க் இவ்வாறு நடந்து கொண்டது தவறு என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னே கண்டனம் தெரிவித்தார். இது பற்றி ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித்திடம் கேட்ட போது, ஸ்டார்க் நடந்து கொண்ட விதம் பற்றி நடுவர்கள் என்னிடம் எதுவும் சொல்லவில்லை.
இப்போதைக்கு இது ஒரு பிரச்சினையாக எழவில்லை. விக்கெட் வீழ்ச்சியை கொண்டாடுகையில், பேட்ஸ்மேனை வெளியே செல்’ என்று கூறுவது போல் நடந்து கொள்வது விளையாட்டின் உத்வேகத்திற்கு அழகல்ல. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், விஜய் ஆட்டம் இழந்ததும் நான் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்ததால், ஸ்டார்க் எப்படி நடந்து கொண்டார் என்பதை பார்க்கவில்லை. இப்போதில் இருந்து, பேட்ஸ்மேன்கள் ஆட்டம் இழக்கும் போது எங்களது பவுலர்கள் அமைதியுடன் நடந்து கொள்வார்கள் என்று உறுதி அளிக்கிறேன் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி