செய்திகள்,திரையுலகம் நடிகர் அஜீத் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்?…

நடிகர் அஜீத் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்?…

நடிகர் அஜீத் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்?… post thumbnail image
சென்னை:-‘என்னை அறிந்தால்’ படத்திற்கு பிறகு நடிகர் அஜீத் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். சிறுத்தை சிவாவும், அஜீத்தும் ஏற்கெனவே ‘வீரம்’ என்ற படத்தில் இணைந்து பணியாற்றினார். தற்போது மீண்டும் இவர்கள் கைகோர்த்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க பல்வேறு முன்னணி நடிகைகளும் போட்டி போட்டு வருகின்றனர். வருகிற பிப்ரவரியில் படத்தை தொடங்க முடிவு செய்துள்ளனர். விரைவில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி