சென்னை:-நடிகர் அஜித்தின் ரசிகர்கள் பலம் தற்போது தமிழ் நாடு மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் உள்ளது. இந்நிலையில் ஆரம்பம் படத்தின் போது அஜித்திற்கு காலில் அடிப்பட்டது. இதனால், மருத்துவர்கள் அவரை ஆபரேஷன் செய்யும் படி கூறினர். ஆனால், என்னை அறிந்தால் படத்தை முடித்த பிறகு செய்கிறேன் என்று அவர் கூறி விட்டார்.
தற்போது இப்படம் முடிந்து விட்டது, பிறகு சிவா இயக்கத்தில் நடிக்க ரெடியாகி விட்டார். யார் என்ன சொல்லியும் இந்த படத்தை முடித்த பிறகு அதை பார்த்து கொள்ளலாம் என்று அவர் கூறிவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி