செய்திகள்,விளையாட்டு 4–வது டெஸ்ட்: புதுமுக வீரர் ராகுல் அபார சதம்!…

4–வது டெஸ்ட்: புதுமுக வீரர் ராகுல் அபார சதம்!…

4–வது டெஸ்ட்: புதுமுக வீரர் ராகுல் அபார சதம்!… post thumbnail image
சிட்னி:-இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இன்று 3–வது நாள் ஆட்டம் நடந்தது. பொறுப்புடன் விளையாடிய ரோகித்சர்மா 132 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 50 ரன்னை தொட்டார். 10–வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 2–வது அரை சதம் ஆகும். அதற்கு அடுத்த சில நிமிடங்களில் ரோகித்சர்மா ஆட்டம் இழந்தார். அவர் 53 ரன்கள் எடுத்தார். அவரது விக்கெட்டை சுழற்பந்து வீரர் லயன் கைப்பற்றினார். அப்போது ஸ்கோர் 97 ஆக இருந்தது. அடுத்து கேப்டன் வீராட் கோலி களம் வந்தார்.

மறுமுனையில் இருந்த புதுமுக வீரர் லோகேஷ் ராகுல் 161 பந்துகளில் 50 ரன்னை எடுத்தார். இதில் 5 பவுண்டரி அடங்கும். மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 122 ரன் எடுத்து இருந்தது. மதிய உணவு இடை வேளைக்கு பிறகு ராகுலும், வீராட் கோலியும் மிகவும் அபாரமாக விளையாடி ஆஸ்திரேலியா பந்துவீச்சை திணறடித்தனர். இதனால் 78.2–வது ஓவரில் இந்தியா 200 ரன்னை தொட்டது. கோலி 108 பந்துகளில் (9 பவுண்டரி) 50 ரன்னை தொட்டார்.

மறுமுனையில் இருந்த ராகுல் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 253 பந்துகளில் 11 பவுண்டரி, 1 சிக்சருடன் 100 ரன்னை எடுத்தார். கர்நாடகாவை சேர்ந்த 22 வயதான ராகுல் மெல்போர்னில் நடந்த டெஸ்டில் அறிமுகம் ஆனார். இதில் அவரால் திறமையை வெளிப்படுத்த இயலவில்லை. தனது 2–வது டெஸ்டில் அவர் முதல் சதத்தை அடித்து முத்திரை பதித்தார். தேனீர் இடைவேளையின் போது இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 234 ரன் எடுத்து இருந்தது. ராகுல் 106 ரன்னும், வீராட் கோலி 67 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி