பாரீஸ்:-பிரான்ஸ் தலைநகரான பாரீசில் இன்று காலை மீண்டும் துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் இரு போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். பாரீஸ் நகருக்கு வெளியே தெற்குப்புற நகரமான மொண்ட்ரோகில் குண்டு துளைக்காத உடை அணிந்த நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.
அதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்சு நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் நடந்த இடத்திற்கு அந்நாட்டு உள்துறை மந்திரி பெர்னார்ட் கசெனுவ் விரைந்து கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று இரவு பாரீஸ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி