இங்கிலாந்து:-செவ்வாய் கிரகத்தில் முட்டைகோஸ் தாவரத்தை வளர்ப்பதற்கான முயற்சியில் இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். இதற்காக முட்டைகோஸ் விதைகள், தண்ணீர், ஊட்டசத்து உரங்கள் ஆகியவற்றை கொண்டு சென்று வளர்ப்பதற்கான ஆய்வுகளை இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.
முட்டைகோசை செவ்வாய் கிரகத்தில் வளர்ப்பதற்கான திட்டத்துக்கு ‘லெட்டூஸ் ஆன் மார்ஸ்’ என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த திட்டத்துக்கு அனுமதி கிடைத்து விட்டால் 2018ம் ஆண்டு வாக்கில் செவ்வாய் கிரகத்திற்கு முட்டைகோஸ் விதைகள் கொண்டு செல்லப்பட்டு வளர்க்கப்படும் என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி