15 கிலோ மீட்டர் சைக்கிளிங் செய்வேன். இப்படி ஒரு கேரக்டர் கிடைக்கும் போது என்ன வேணா பண்ணலாம். இந்தப் படத்துக்காக நான் ஒதுக்கின 3 வருஷத்துல 9 படங்கள்ல நடிச்சிருக்கலாம், ஆனால் ‘ஐ’ படத்தோட கதையைக் கேட்டு நான் மயங்கிப் போயிட்டேன். இந்தப் படத்துல நடிச்சதுக்காக நான் பெருமைப்படறேன். உலகம் முழுக்க இந்தப் படம் எனக்கு நல்ல பேரை வாங்கிக் கொடுக்கும். வழக்கமான தமிழ்ப் படங்களை விட ‘ஐ’ படம் ஒரு ஹாலிவுட் படத்தைப் போல இருக்கும்னு நான் கண்டிப்பா சொல்வேன். இந்தப் படத்துல மலையாள நடிகர் சுரேஷ் கோபி ஒரு முக்கியமான கதாபாத்திரத்துல நடிச்சிருக்காரு.
என்னோட ஆரம்ப காலத்துல மலையாள சினிமாதான் எனக்கு வெற்றிப் பாதையை அமைச்சிக் கொடுத்தது. மலையாள நடிகர் அபு சலீம்தான் என்னோட உடம்பை ஏத்தறதுக்கு இன்ஸ்பிரேஷனா அமைஞ்சவரு. எதிர்காலத்துலயும் எனக்கு வர்ற எல்லா படங்கள்லயும் நடிக்க மாட்டேன். நல்ல தரமான படங்கள்ல மட்டும்தான் நடிப்பேன், என விக்ரம் பேசினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி