லண்டன்:-மிஸ் வேர்ல்டு என அழைக்கப்படும் உலக அழகி போட்டியில் இனி நீச்சல் உடை பிரிவு சார்ந்த போட்டி நடைபெறாது. கடந்த 63 வருடங்களாக போட்டியாளர்கள் நீச்சல் உடையில் தோன்றி பிகினி சுற்று போட்டியில் கலந்து கொள்வார்கள். இந்த சுற்று போட்டி வருங்காலத்தில் இடம் பெறாது என்று போட்டி அமைப்பாளர்கள் கூறி உள்ளனர்.
இது குறித்து உலக அழகி போட்டியின் பெண் தலைவரான ஜூலியா மோர்லி (வயது 74) செய்தி இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், பெண்கள் நீச்சல் உடை அணிந்து இங்கும் அங்கும் அலைவதை பார்க்க நான் விரும்பவில்லை. அது அவர்களுக்கு எதனையும் செய்வதில்லை. மேலும் அது நமக்கும் எதனையும் செய்ய போவதில்லை. அவர்களின் அங்கங்கள் ஒருவரை விட ஒருவருக்கு பெரியதாக இருக்கிறதா?… என்பது குறித்து எங்களுக்கு கவலையில்லை. உண்மையில் நாங்கள் அவர்களது பிகினி உடையில் மறைக்கப்பட்ட உடல் பாகங்களை பார்க்க வரவில்லை. அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை கவனிக்கவே நாங்கள் உண்மையில் உள்ளோம் என்று கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி