இந்நிலையில் கற்பழிப்பில் ஈடுபட்ட போலீஸ்காரர் அவினிஸ் யாதவ் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். டெல்லிக்கு ரெயிலில் தப்பிச் செல்ல முயன்ற அவரை பரேலி ரெயில் நிலையத்தில் அதிரடிப்படை போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். மற்றொரு போலீஸ்காரரை தொடர்ந்து தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய சப்–இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். போலீஸ் நிலைய பொறுப்பாளர் ஹிமன்சு சுக்லா, ஏட்டு உதய்வீர்சிங் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். கற்பழிப்பில் ஈடுபட்ட போலீஸ்காரர்கள் வீர்பால் சிங் யாதவ், அவினிஸ் யாதவ் ஆகிய இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
முதலில் இருவரும் தங்கள் மீதான புகாரை மறுத்தனர். சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கற்பழிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரையும் கைது செய்ய உத்தரவிடப்பட்டது. சம்பவம் பற்றி பாதிக்கப்பட்ட சிறுமி கூறும் போது, கடந்த 31–ந்தேதி இரவு 8 மணிக்கு நான் வெளியில் சென்று வருவதாக எனது தாயிடம் கூறிச் சென்றேன். அப்போது ஒரு கார் வந்தது. அதில் 2 போலீஸ்காரர்கள் இருந்தனர். அவர்கள் என்னை எங்கு போக வேண்டும் என்று கேட்டு, நான் செல்ல வேண்டிய இடத்தில் விட்டு விடுவதாக கூறினார்கள். அதை நம்பி காரில் சென்றேன். ஆனால் என்னை போலீஸ் நிலையத்தில் உள்ள ஒரு அறையில் வைத்து பலவந்தப்படுத்தினர். பின்னர் எனது கிராமத்தில் கொண்டு வந்து விட்டுச் சென்று விட்டனர் என்றார். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு உத்தரப்பிரதேச அரசு சார்பில் ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி