செய்திகள்,திரையுலகம் மதம் மாறிய நடிகையை மணக்கவிருக்கும் பிரபல தொழிலதிபர்!…

மதம் மாறிய நடிகையை மணக்கவிருக்கும் பிரபல தொழிலதிபர்!…

மதம் மாறிய நடிகையை மணக்கவிருக்கும் பிரபல தொழிலதிபர்!… post thumbnail image
சென்னை:-அழகி, சண்டைக்கோழி, முத்துக்கு முத்தாக ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மோனிகா. இவர் சில மாதங்களுக்கு முன் இஸ்லாமிய மதத்திற்கு மாறி ரஹீமா என்று தன் பெயரை மாற்றி கொண்டார்.

தற்போது இவருக்கும், சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் மாலிக் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. மாலிக்கின் சொந்த ஊர் மதுரை. இவர்கள் திருமணம் சென்னையில் வருகிற 11ம் தேதி நடக்கிறது. இது குறித்து அவர் அவர் கூறுகையில், என் கணவர் மாலிக் மதுரையை சேர்ந்தவராக இருந்தாலும், சென்னையில் தான் தொழில் செய்து வருகிறார். மின்சாதன பொருட்களை அவர் வியாபாரம் செய்து வருகிறார். அவர் என் தந்தையின் நண்பருடைய மகன். இது காதல் திருமணம் இல்லை, உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் தான். என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி