1) எந்திரன் :- தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு சென்றவர் ஷங்கர். இவர் இயக்கிய எந்திரன் தமிழ் நாடு மட்டுமின்றி மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்தது. இப்படம் ரூ 256 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டுள்ளது.
2) விஸ்வரூபம் :- படம் பெயர் மட்டுமில்லை, இது கமலின் விஸ்வரூபமும் கூட, பல கட்ட பிரச்சனைகளை தாண்டி வெளிவந்த இந்த படம் சுமார் 220 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது.
3)தசாவதாரம் :- கமலின் கடினமான நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமாரின் கமர்ஷியல் இயக்கத்தில் வெளிவந்த தசவதாரம் அந்த வருடத்தின் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் ரூ 200 கோடி வசூல் செய்ததாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இல்லை.
4) துப்பாக்கி :- ரஜினி, கமலுக்கு அடுத்த இடத்தில் விஜய் தான் இருக்கிறார். விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் துப்பாக்கி. முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யின் அதிரடி ஆக்ஷனில் இப்படம் ரூ 180 கோடி வசூல் செய்துள்ளது.
5) ஆரம்பம், மங்காத்தா, வீரம் :- அதிக வசூல் செய்த படங்களில் அந்த கருத்து கணிப்பில் 5,6,7 ஆகிய மூன்று இடத்தையும் அஜித் தான் பிடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான ஆரம்பம் ரூ 135 கோடி, மங்காத்தா ரூ 130 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மங்காத்தா வசூல் குறித்து பிரபல தொலைக்காட்சியும் குறிப்பிட்டு இருந்தது. அதே போல வீரம் ரூ 130 கோடி வசூல் செய்ததாக பிரபல ஆங்கில பத்திரிக்கை வெளியிட்டு இருந்தது.
6) சிவாஜி :- தமிழ் சினிமாவில் மார்க்கெட்டை முதன் முதலாக இந்திய அளவில் கொண்டு சென்ற படம். ஷங்கரின் பிரம்மாண்டம், ரஜினியின் ஸ்டையில் என முதன் முதலாக இணைந்த இந்த கூட்டணி ரூ 128 கோடி வரை வசூல் செய்துள்ளது.
7) கத்தி :- துப்பாக்கி வெற்றியை தொடர்ந்து விஜய்+முருகதாஸ் இணைந்த கத்தி இந்த வருடம் தீபாவளிக்கு வெளிவந்து வசூல் வேட்டை நடத்தியது. இப்படம் இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதால், தற்போது வரை ரூ 124.5 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
8) சிங்கம்-2 :- ரஜினி, கமல், அஜித், விஜய் இவர்களுக்கு பிறகு இதில் இடம்பிடிப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் ஹரியின் ஆக்ஷன் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் வெளிவந்த சிங்கம்-2 ரூ 100 கோடி வசூல் செய்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி