செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் ஏர் ஏசியா விமானத்தின் கறுப்பு பெட்டி இருக்கும் பின்பகுதியை கண்டுபிடித்ததாக தகவல்!…

ஏர் ஏசியா விமானத்தின் கறுப்பு பெட்டி இருக்கும் பின்பகுதியை கண்டுபிடித்ததாக தகவல்!…

ஏர் ஏசியா விமானத்தின் கறுப்பு பெட்டி இருக்கும் பின்பகுதியை கண்டுபிடித்ததாக தகவல்!… post thumbnail image
ஜகார்தா:-கடந்த டிசம்பர் 28ம் தேதி இந்தோனேசியாவின் சுரபயாவிலிருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த ஏர் ஏசியா விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 162 பேரும் பலியானார்கள். இதையடுத்து பலியானவர்களின் உடல்களையும், விமானத்தை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. கடந்த எட்டு நாட்களாக நடைபெற்று வரும் மீட்பு பணியில், இது வரை 37 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் விபத்திற்கான காரணம் குறித்து அறிவதற்காக, கடலுக்கடியில் விமானத்தின் கறுப்பு பெட்டியை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்தோனேசிய கடற்படை ரோந்து கப்பல் ஒன்று விமானத்தின் பின்பகுதியை கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த ரோந்து கப்பலின் கேப்டன் யயன் சோபியான் செய்தியாளர்களிடம் கூறுகையில், விமானத்தின் பின்பகுதி என மிக அதிக அளவில் கருதப்படும் முக்கிய பொருளை கண்டுபிடித்துள்ளதாக கூறினார். எனினும், இது விமானத்தின் பின் பகுதி தானா என்பதை மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் ‘பசர்னாஸ்’ அமைப்பு இது வரை உறுதிப்படுத்தவில்லை.

ஒரு வேளை கண்டுபிடிக்கப்பட்டது விமானத்தின் பின்பகுதி தான் என்று உறுதி செய்யப்பட்டால், அதில் தான் விமானத்தின் கறுப்பு பெட்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கறுப்பு பெட்டியில் பதிவான தகவல்கள் மூலம் விபத்திற்கான காரணமும் வெளி உலகிற்கு தெரியவரும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி