மாஸ்கோ:-ரஷியாவைச் சேர்ந்த கால்பந்து வீரர் கசான் மகோமெதோவ் (20). இவர் அன்ஷி மகா செக்கலா தேசிய கால்பந்து லீக் கிளப் அணியில் விளையாடி வந்தார். இந்த கிளப் வடக்கு காகசஸின் டாஜெஸ் பகுதியில் உள்ளது. இங்கு தீவிரவாதிகளுக்கும், ரஷிய ராணுவத்துக்கும் இடையே அடிக்கடி சண்டை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மகோமெதோவ் நேற்று காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது யாரோ மர்ம நபர் இவர் மீது துப்பாக்கியால் சுட்டார். இதனால் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். அவரை சுட்டு கொன்றது யார் என தெரியவில்லை. அதுகுறித்து விசாரணை நடக்கிறது.
ரஷியாவில் வருகிற 2018–ம் அண்டில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடக்கிறது. இப்போட்டி ரஷியாவில் 11 நகரங்களில் நடக்கிறது. இந்நிலையில் கால்பந்து வீரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ரஷியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி