தலித் வகுப்பைச் சேர்ந்த மது கின்னர் இந்த சாதனை வெற்றி பற்றி குறிப்பிடுகையில், மேயர் தேர்தலில் போட்டியிட்ட நான் பிரசாரத்தின்போது எனது சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தில் சுமார் 70 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவு செய்தேன். முதல் முறையாக என்னை இந்த தேர்தலில் போட்டியிட வைத்ததும், வெற்றி பெற வைத்ததும் உள்ளூர் மக்கள்தான். அவர்களின் ஆதரவால் தான் இந்த தேர்தலில் என்னால் வெற்றியடைய முடிந்தது என்று கூறினார்.
இது மது கின்னருக்கு கிடைத்த வெற்றியல்ல; பா,ஜ.க.வுக்கு கிடைத்த தோல்வி என்பதை அக்கட்சி உணர வேண்டும் என காங்கிரஸ் தெரிவித்துள்ள நிலையில் மக்களின் இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாகவும், இது தொடர்பாக ஆய்வு செய்யவுள்ளதாகவும் ராய்ப்பூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் ராஜேஷ் ஷர்மா குறிப்பிட்டுள்ளார். 8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள மது கின்னர் பல்வேறு வேலைகளை செய்தும் ரெயில்களில் ஆடிப்பாடி பணம் சேகரித்தும் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி