சென்னை:-தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் நடிகை அனுஷ்காவிற்கு தான் முதலிடம். இவர் நடித்து வரும் பாஹுபலி, ருத்ரமாதேவி ஆகிய படங்கள் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற சூது கவ்வும் படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் பாபி சிம்ஹா நடிகை நயன்தாராவிற்கு சிலை வைப்பார். அதேபோல் டோலிவுட்டில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் அனுஷ்காவிற்கு சிலை வைப்பது போல் காட்சிகள் எடுக்கவிருக்கிறார்களாம். இதனால், அனுஷ்காவிற்கு பிரம்மாண்ட சிலை ஒன்று ரெடியாகி வருகிறதாம். ஆனால், அனுஷ்கா தரப்பில் இருந்து இன்னும் இதற்கு சம்மதம் வரவில்லை என கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி