செய்திகள்,திரையுலகம் திரு.வி.க.பூங்கா (2015) திரை விமர்சனம்…

திரு.வி.க.பூங்கா (2015) திரை விமர்சனம்…

திரு.வி.க.பூங்கா (2015) திரை விமர்சனம்… post thumbnail image
நாயகன் செந்தில் கிராமத்தில் தாயுடன் வாழ்ந்து வருகிறார். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், ஊரில் ட்ராக்டர் வண்டி ஓட்டிக் கொண்டு டிரைவர் வேலை பார்த்து வருகிறார். ஒருநாள் சைக்கிளில் செந்தில் செல்லும்போது நாயகி சுவாதியை இடித்து விடுகிறார். இதில் இருவரும் சேற்றில் விழுந்து விடுகிறார்கள். அப்போது சுவாதி செந்திலிடம் சண்டை போட்டு சென்று விடுகிறார். அதன்பின் மறுநாள் செந்திலை வழியில் பார்க்கும் சுவாதி, தவறுதலாக உங்களை திட்டிவிட்டேன், மன்னித்து விடுங்கள் என்று கூறி உங்களை எனக்கு பிடித்திருக்கிறது. உங்களுக்கும் என்னை பிடித்திருந்தால் நாளை உங்களுக்காக ஒரு இடத்தில் காத்திருப்பேன் என்று சொல்லி விட்டு செல்கிறாள். மறுநாள் அந்த இடத்திற்கு செல்லும் செந்தில் தன் காதலை சொல்கிறார். இருவரும் காதலித்து வருகிறார்கள்.

ஒருநாள் சுவாதி மும்பைக்கு போகப்போறேன் என்று கூறுகிறார். அதற்கு செந்தில் என்னை விட்டு போகாதே என்று கூறுகிறார். சுவாதியோ நான் ஸ்கூல் படிக்கும்போது ஒருவனை எனக்கு பிடித்தது. காலேஜ் படிக்கும்போது ஒருவனை பிடித்தது. அதுபோல் உன்னையும் பிடித்தது. இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாதே என்று கூறி விட்டு செல்கிறாள்.இதனால் மனமுடையும் செந்தில் சோகத்திலேயே இருந்து வருகிறான். சுவாதியை மறக்க முடியாமல் தவிக்கிறான். பெண்கள் என்றாலே வெறுக்கிறான். பின்னர் உறவினர் உதவியால் விழுப்புரத்தில் கார் டிரைவர் வேலைக்கு செல்கிறான்.
எந்த பெண்ணையும் இனிமேல் காதலிக்கக் கூடாது. பெண்கள் என்றாலே வெறுக்கும் செந்தில் மீண்டும் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் செந்தில், இவரே படத்தை இயக்கி தயாரிக்கவும் செய்திருக்கிறார். பல விதங்களில் நடிப்பை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். பாதி நேரம் சோகத்துடனே வருகிறார். இவரது முக பாவணைகள் காட்சிக்கு பொருந்தாமல் இருக்கிறது.காதலில் தோற்றாலும், ஏமாற்றப் பட்டாலும் தற்கொலை முடிவல்ல, அதற்கு மேல் அன்பு செலுத்தக்கூடியவர்கள் உங்களுடன் இருக்கிறார்கள் என்ற கருத்தை சொல்ல வந்த இயக்குனர், அதை திரைக்கதையில் தெளிவில்லாமல் இயக்கியிருக்கிறார். படம் முழுவதும் சுவாரஸ்யம் இல்லாமலேயே செல்கிறது. காமெடிகள் எதுவும் எடுபடவில்லை. காதல் தண்டபாணி எதற்கு வருகிறார் என்பதே புரியவில்லை. தேவையற்ற காட்சிகள் நிறைய அமைத்திருக்கிறார். கதாநாயகிகளாக நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். செந்திலுக்கு அம்மாவாக வருபவர் சிறப்பாக நடித்திருக்கிறார்.
பிரவிண் மிர்ராவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். கொளஞ்சிகுமாரின் ஒளிப்பதிவு சுமார் ரகம்.

மொத்தத்தில் ‘திரு.வி.க.பூங்கா’ காதல் இல்லை…………

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி