செய்திகள்,தொழில்நுட்பம்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் விபத்தில் சிக்கிய ஏர் ஏசியா விமானம் அனுமதி பெறாத வழித்தடத்தில் பறந்தது அம்பலம்!…

விபத்தில் சிக்கிய ஏர் ஏசியா விமானம் அனுமதி பெறாத வழித்தடத்தில் பறந்தது அம்பலம்!…

விபத்தில் சிக்கிய ஏர் ஏசியா விமானம் அனுமதி பெறாத வழித்தடத்தில் பறந்தது அம்பலம்!… post thumbnail image
ஜகார்த்தா:-இந்தோனேசியாவில் கடந்த ஞாயிறு அன்று விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தின் உடைந்த பாகங்கள் மற்றும் இறந்தவர்களின் உடல்களை தேடுதல் பணிகளில் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வரும் நிலையில், தற்போது அந்த விமானம் உரிய அனுமதி பெறாத வழித்தடத்தில் பறந்ததாக அந்நாட்டுப் போக்குவரத்துத் துறை இன்று தெரிவித்துள்ளது.

இந்தோனேசிய அரசு தனது நாட்டில் இயங்கும் ஒவ்வொரு விமான சேவை வழங்கும் நிறுவனத்திற்கும், எந்தெந்த வழித்தடத்தில் எந்தெந்த நேரத்தில் விமானங்களை இயக்க அனுமதி உண்டு என்பதைத் தெரிவிக்கும் அட்டவணை ஒன்றை வழங்கி இருக்கிறது. கடந்த ஞாயிறு அன்று சுரபயா-சிங்கப்பூர் வழித்தடத்தில் சென்றபோதுதான் ஏர் ஏசியா விமானம் விபத்துக்குள்ளானது. ஆனால், அரசு அளித்த அட்டவணையின்படி ஞாயிற்றுக்கிழமைகளில் ஏர் ஏசியா விமானம் அந்த வழித்தடத்தில் பயணிக்க அனுமதி இல்லை. அதுமட்டுமின்றி வழித்தடத்தை மாற்றுவதற்கான அனுமதியையும் போக்குவரத்துத் துறையிடம் அந்நிறுவனம் கேட்கவில்லை என்று போக்குவரத்து துறை செய்தித் தொடர்பாளர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதுகுறித்து விமான போக்குவரத்து தலைமை இயக்குனரிடம் கேட்டபோது, கொடுத்திருந்த அட்டவணையைப் பின்பற்றாமல் ஏர் ஏசியா விமானம் பயணித்துள்ளது. இதனால் இனி அந்த வழித்தடத்தில் விமானத்தை இயக்குவதற்கு அந்த நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விசாரணை முடியும் வரை இந்த தடை நீடிக்கும் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி