செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் கிரேக்க நாட்டில் தீப்பிடித்த கப்பலில் இருந்து 200 பயணிகள் மீட்பு: ஒருவர் பலி!…

கிரேக்க நாட்டில் தீப்பிடித்த கப்பலில் இருந்து 200 பயணிகள் மீட்பு: ஒருவர் பலி!…

கிரேக்க நாட்டில் தீப்பிடித்த கப்பலில் இருந்து 200 பயணிகள் மீட்பு: ஒருவர் பலி!… post thumbnail image
ஏதென்ஸ்:-இத்தாலியின் நார்மன் அட்லாண்டா என்ற அந்த கப்பலில் 422 பயணிகள் 56 சிப்பந்திகள் என மொத்தம் 478 பேர் பயணம் செய்தனர். கிரேக்க நாட்டின் கார்பு தீவு அருகே சென்றபோது கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. அதை தொடர்ந்து கிரேக்கம், இத்தாலி மற்றும் அல்பேனியா ஆகிய நாடுகள் மீட்பு பணியில் ஈடுபட்டன. இந்நிலையில் நேற்று இரவு வரை கப்பலில் சிக்கியிருந்த 200 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு கப்பலில் பத்திரமாக இறக்கப்பட்டனர்.

மேலும் அதில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இதில் இத்தாலி மற்றும் கிரேக்க நாடுகளை சேர்ந்த கடலோர எல்லை பாதுகாப்பு படை கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன. இதற்கிடையே கப்பலில் எரியும் தீயை அணைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் தீயில் சிக்கி பலியானார். 2 பேர் காயம் அடைந்தனர்.
ஏற்கனவே மீட்கப்பட்ட 9 பேர் இத்தாலியில் உள்ள லெக்சீ நகருக்கு கொண்டு வரப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 குழந்தைகளும், ஒரு கர்ப்பிணியும் அடங்குவர்.

தீப்பிடித்த கப்பலில் கிரேக்க பயணிகள்தான் பெருமளவில் பயணம் செய்துள்ளனர். அதில் கிரேக்க பயணிகள் 234 பேரும் 34 சிப்பந்திகளும் உள்ளனர். அவர்களை தவிர துருக்கி, அல்பேனியா, இத்தாலி, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ் நாடுகளை சேர்ந்தவர்களும் உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி