13 ஆண்டுகளாக போர் நடைபெற்ற நிலையில் நேட்டோ படைகள் அங்கிருந்து வெளியேறுமாறு ஆப்கானிஸ்தான் அரசு கேட்டுக்கொண்டது. அதை தொடர்ந்து இந்த ஆண்டு இறுதிக்குள் படைகள் வாபஸ் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது.அதை தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தங்கள் படைகளை படிப்படியாக திரும்ப பெற்றன. இந்நிலையில் நேற்று ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகள் முற்றிலும் வாபஸ் ஆயின. அதை தொடர்ந்து தலிபான் தீவிரவாதிகளுடன் ஆன 13 ஆண்டு போர் முடிந்தது. படைகள் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து தலைநகர் காபூலில் சிறிய அளவில் விழா நடத்தப்பட்டது. தலிபான்களின் தாக்குதல் அச்சுறுத்தலை தொடர்ந்து இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
அதில் நேட்டோ கமாண்டரும், அமெரிக்க தளபதியுமான ஜான் கேம்பல் வீரர்கள் மத்தியில் பேசினார். அப்போது, நாம் ஆப்கானிஸ்தான் மக்களை இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வந்தோம். அவர்களுக்கு எதிர்கால நம்பிக்கையை ஊட்டியிருக்கிறோம். நமது நாடுகளின் பாதுகாப்புக்காக ஆப்கானிஸ்தானை வலிமையுள்ளதாக மாற்றியிருக்கிறீர்கள் என்றார். வருகிற ஜனவரி 1–ந்தேதி முதல் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பை அந்நாட்டு ராணுவம் முழுமையாக ஏற்க உள்ளது. தற்போது 12,500 நேட்டோ படை வீரர்கள் மட்டுமே ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் தலிபான்களுக்கு எதிராக போரிடும் ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கும், போலீசாருக்கும் உதவியாக இருப்பார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி