செய்திகள்,திரையுலகம் கப்பல் (2014) திரை விமர்சனம்…

கப்பல் (2014) திரை விமர்சனம்…

கப்பல் (2014) திரை விமர்சனம்… post thumbnail image
வைபவ், கருணாகரன், குண்டு அர்ஜுன், இன்னும் ரெண்டு பேர் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். கல்யாணம் செய்துகொண்டால் நட்பு போய்விடும் என்ற எண்ணம் கொண்டு, கல்யாணமே செய்துகொள்ள கூடாது என்ற குறிக்கோளுடன் வாழ்கின்றனர். இந்த உறுதி ஏற்புக்கு மாறாக, காதலிக்க வேண்டும் என்ற ஆசை வைபவுக்கு வந்துவிடுகிறது. அதனால் நண்பர்களிடம் பொய் சொல்லிவிட்டு சென்னை வந்து வி.டி.வி.கணேஷுடன் தங்குகிறார். சோனம் பாஜ்வா தன் நண்பன் அழைத்ததாக சென்னையில் உள்ள ஒரு பப்பில் பார்ட்டிக்கு செல்கிறார். அவளை பார்த்ததும் வைபவ் அவள் மீது காதல் கொள்கிறார். வைபவை தேடி சென்னைக்கு வரும் நண்பர்கள், இவர் காதலிப்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார்கள். காதலர்களைப் பிரிக்க முயற்சி செய்கிறார்கள். காதலுக்கும், நட்புக்கும் இடையே சிக்கி தவிக்கிறார் வைபவ்.

இறுதியில் வைபவ், சோனம் பாஜ்வாவின் காதலைப் புரிந்து கொண்டு மனம் திருந்தி அவர்களை சேர்த்து வைக்கிறார்களா…? இல்லையா…? என்பதே ‘கப்பல்’ படத்தின் மீதிக்கதை. இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் என்பதை படத்தின் அறிமுக இயக்குனர் கார்த்திக் ஜி க்ரிஷ் நிருபித்துவிட்டார். இன்றைய இளைஞர்கள் நிறைய பேர் காதல் திருமணம் செய்துக் கொண்டாலும், அவர்களுக்கு காதல் மீது நம்பிக்கை அற்று விட்ட அவர்களின் மன நிலையை கருத்தில் கொண்டு இயக்கியுள்ள இயக்குனரை பாராட்டலாம். படத்தின் நாயகன் வைபவ் கதை சொல்லி அறிமுகம் ஆகும் காட்சி சுவாரஸ்யம். வைபவ்க்கு இப்படம் ரொம்ப முக்கியமான படம் எனலாம். காதலிக்க யாரும் கிடைக்காமல் தவிக்கும் அவரின் அப்பாவியான நடிப்பு அருமை. ஹீரோயின் சோனம் பாஜ்வா நல்ல அழகு. சோனம் பாஜ்வா போன்ற ஒரு அழகான பதுமையாக வலம் வருகிறார். திறமையாலும், அழகாலும், கவர்ச்சியாலும் ரசிகர்களை கவர்கிறார்.

காதலுக்கு எதிராக வசனங்கள் எவ்வளவு கூர்மையாக இருந்ததோ அதை மிஞ்சும் விதமாக இருக்கிறது வி டி வி கணேஷ் கூறும் வசனங்கள். ஒவ்வொரு தடவையும் வைபவுக்கு பதில் வி.டி.வி.கணேஷ் மாட்டிக்கொண்டு அடிவாங்குவது நல்ல காமெடி. இடையில் கருணாகரன் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக செய்துள்ளார். ஒளிப்பதிவாளர் தினேஷ் படத்தின் காட்சியமைப்பை பிரம்மாண்டமாய் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன் நல்ல பின்னணி இசை, பாடல்கள் என கலக்கியுள்ளார். குறிப்பாக “ஊருவிட்டு ஊரு வந்து…” என்ற ரீமிக்ஸ் பாடலும், “சாக்லேட்…” என்ற பாடலும் அமைத்த விதம் அருமை.

ஆக மொத்தத்தில் ‘கப்பல்’ கலகலப்பு…………….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி