இறுதியில் வைபவ், சோனம் பாஜ்வாவின் காதலைப் புரிந்து கொண்டு மனம் திருந்தி அவர்களை சேர்த்து வைக்கிறார்களா…? இல்லையா…? என்பதே ‘கப்பல்’ படத்தின் மீதிக்கதை. இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் என்பதை படத்தின் அறிமுக இயக்குனர் கார்த்திக் ஜி க்ரிஷ் நிருபித்துவிட்டார். இன்றைய இளைஞர்கள் நிறைய பேர் காதல் திருமணம் செய்துக் கொண்டாலும், அவர்களுக்கு காதல் மீது நம்பிக்கை அற்று விட்ட அவர்களின் மன நிலையை கருத்தில் கொண்டு இயக்கியுள்ள இயக்குனரை பாராட்டலாம். படத்தின் நாயகன் வைபவ் கதை சொல்லி அறிமுகம் ஆகும் காட்சி சுவாரஸ்யம். வைபவ்க்கு இப்படம் ரொம்ப முக்கியமான படம் எனலாம். காதலிக்க யாரும் கிடைக்காமல் தவிக்கும் அவரின் அப்பாவியான நடிப்பு அருமை. ஹீரோயின் சோனம் பாஜ்வா நல்ல அழகு. சோனம் பாஜ்வா போன்ற ஒரு அழகான பதுமையாக வலம் வருகிறார். திறமையாலும், அழகாலும், கவர்ச்சியாலும் ரசிகர்களை கவர்கிறார்.
காதலுக்கு எதிராக வசனங்கள் எவ்வளவு கூர்மையாக இருந்ததோ அதை மிஞ்சும் விதமாக இருக்கிறது வி டி வி கணேஷ் கூறும் வசனங்கள். ஒவ்வொரு தடவையும் வைபவுக்கு பதில் வி.டி.வி.கணேஷ் மாட்டிக்கொண்டு அடிவாங்குவது நல்ல காமெடி. இடையில் கருணாகரன் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக செய்துள்ளார். ஒளிப்பதிவாளர் தினேஷ் படத்தின் காட்சியமைப்பை பிரம்மாண்டமாய் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன் நல்ல பின்னணி இசை, பாடல்கள் என கலக்கியுள்ளார். குறிப்பாக “ஊருவிட்டு ஊரு வந்து…” என்ற ரீமிக்ஸ் பாடலும், “சாக்லேட்…” என்ற பாடலும் அமைத்த விதம் அருமை.
ஆக மொத்தத்தில் ‘கப்பல்’ கலகலப்பு…………….
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி