ஹாங்காங்:-உலகில் எல்லோருக்கும் பிடித்த நடிகர் ஜாக்கி சான் தான். அவரின் துறு துறு நடிப்பு, ஆக்ஷன் காட்சிகளை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை. ஆனால், சில நாட்களுக்கு முன் இவரது மகன் போதப் பொருள் வழக்கில் கைதானதை நினைத்து தற்போது வரை வருத்தப்பட்டு வருகிறார்.
சமீபத்தில் இது குறித்து, போதைப் பொருளுக்கு எதிராகச் செயல்படும் அம்பாஸடராக அரசு என்னை நியமித்தது எனக்குப் பெருமையாக இருந்தது. ஆனால், என் மகனே இப்படிப்பட்ட ஒரு வழக்கில் சிக்கி இருப்பது என் இதயமே நொறுங்கியதுபோல் இருக்கிறது.
அவன் போதைப் பொருள் பயன்படுத்தியதற்கு நானும் ஒரு காரணம், நான் அவனை சரியாக வளர்க்கவில்லை. எனவே, இதற்கு நானும் ஒரு பொறுப்பாளி ஆவேன். இதற்கு நான் சீன மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இப்படிப்பட்ட ஒரு மகனைப் பெற்றதற்காக நான் அவமானப்படுகிறேன் என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி