சென்னை:-நடிகை திரிஷா திருமணம் குறித்து நாளுக்கு நாள் ஒரு தகவல் வருகிறது. இந்நிலையில் ஜெயம் ரவி, சுராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் திரிஷா தான் ஹீரோயினாம். இப்படத்தில் பிரபுவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படக்குழுவிற்கு பிரபு தன் வீட்டில் இருந்து விருந்து வைக்க, திரிஷா அதை டுவிட்டரில் தட்டி விட்டார்.
சிறிது நேரம் கழித்து பிரபு, பதிலுக்கு நீ கல்யாண விருந்து எப்போ போடுவ. சீக்கிரமே போடுமா என்று திரிஷாவை பார்த்து தமாஷ் செய்தாராம். பட யூனிட்டார் முன்பு பிரபு இப்படி சொன்னதால் திரிஷாவுக்கு தர்மசங்கடமாகிவிட்டதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி