செய்திகள்,திரையுலகம் லிங்கா பிரச்சினை: விநியோகஸ்தர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படுமா?…

லிங்கா பிரச்சினை: விநியோகஸ்தர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படுமா?…

லிங்கா பிரச்சினை: விநியோகஸ்தர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படுமா?… post thumbnail image
சென்னை:-ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘லிங்கா’ படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் தங்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என விநியோகஸ்தர்கள் ரஜினிக்கு கோரிக்கை விடுத்தனர். நஷ்ட ஈடு தர வலியுறுத்தி அவரது வீட்டிற்கு ஊர்வலமாக செல்லவும் முடிவெடுத்தனர். இந்நிலையில் லிங்கா படத்தை வாங்கி வெளியிட்ட வேந்தர் மூவிஸ் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதையடுத்து ஊர்வலமாக செல்வதை விநியோகஸ்தர்கள் ரத்து செய்தனர்.

புதன்கிழமைக்குள் தியேட்டர்களின் வசூல் அதிகமாகும் என தயாரிப்பாளர்கள் தரப்பில் எதிர்பார்த்ததால் அவர்களது கோரிக்கையை விநியோகஸ்தர்கள் ஏற்றுக்கொண்டனர். எனினும், கடந்த இரண்டு நாட்களாக வசூலில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்களுக்கு உரிய நஷ்ட ஈடு தருவார்களா? என விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. இதுகுறித்து திருச்சி மற்றும் தஞ்சை ஏரியா விநியோகஸ்தரான சிங்காரவேலன் கூறுகையில், ரஜினி படம் என்பதால் தான் மிகுந்த விலை கொடுத்து ‘லிங்கா’ படத்தை வாங்கி வெளியிட்டோம்.

ஆனால் எதிர்பார்த்தபடி படம் ஓடாததால் பெருத்த நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளோம். ரஜினி நடித்த ‘பாபா’ படம் நஷ்டம் அடைந்தபோது அதன் தயாரிப்பாளராக இருந்த ரஜினி அதற்காக நஷ்ட ஈடு வழங்கினார். அதேபோல் தற்போதும் அவர் நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்று கூறினார். ‘லிங்கா’ படம் முதலில் பரபரப்பாக பேசப்பட்டாலும், படிப்படியாக சென்னை உள்பட அனைத்து ஏரியாக்களிலும் படத்தின் வசூல் குறைய ஆரம்பித்ததால் விநியோகஸ்தர்கள் நஷ்டத்திற்கு உள்ளானதாக தெரிகிறது. எனவே புதன்கிழமைக்குள் நஷ்ட ஈடு குறித்து உரிய தீர்வு ஏற்படாவிட்டால் விநியோகஸ்தர்கள் ரஜினியை சந்தித்து முறையிடக்கூடும் என கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி