அந்நாட்டின் யோமியுரி ஷிம்புன் என்ற தினசரி நாளிதழ் வெளியிட்ட செய்தியின் படி, 79 வயது முதியவர், 29 வயதான தீயணைப்பு வீரர் உட்பட 11 பேர் பலியாகினர். மீட்புப் பணிக்காகச் சென்ற தீயணைப்பு வீரர், பனியை அகற்றும்போது அதில் சிக்கி இறந்தார். மற்றவர்கள் வடக்கு பகுதியின் முக்கியத் தீவான ஹோக்கைடோ மற்றும் கிழக்குக் கடல் பகுதிக்கு அருகில் உள்ள ஹோன்ஷுவை சேர்ந்த வயதானவர்கள் ஆவார்கள்.
இது தவிர மோசமான வானிலை காரணமாக, நூற்றுக்கும் மேற்பட்ட சாலை விபத்துகளால் இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பொதுத்துறை வாகனங்கள் விபத்துக்குள்ளானதுடன் புல்லட் ரயில்கள் தாமதமாக இயங்க நேரிட்டது. நில்கட்டா மற்றும் நகானோ மலைப்பகுதியில் சாலையை பனி மூடியதால் வெளி உலகத்தோடு எந்த தொடர்பும் இன்றி 270-க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவித்து வருகின்றனர். பனிப்புயலின் தாக்கம் தற்போது நிறைய இடங்களில் குறைந்துள்ளதாகவும், கடலுக்கு அருகிலுள்ள பகுதிகளில் மட்டும் பனிப்பொழிவு நீடிக்குமென்றும் ஜப்பான் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி