செய்திகள்,திரையுலகம் விரைவில் ‘3 இடியட்ஸ்’ பார்ட்-2!…

விரைவில் ‘3 இடியட்ஸ்’ பார்ட்-2!…

விரைவில் ‘3 இடியட்ஸ்’ பார்ட்-2!… post thumbnail image
மும்பை:-ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், அமீர்கான், மாதவன், ஷர்மான் ஜோஷி ஆகியோரது நடிப்பில் வெளிவந்த 3 இடியட்ஸ் படம் சூப்பர்-டூப்பர் ஹிட்டானது. இப்படம் பின்னர் நண்பன் படமாக வெளிவந்தது. இந்தி அளவுக்கு ஹிட் இல்லையென்றாலும், இங்கும் ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் 3-இடியட்ஸ் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க எண்ணியுள்ளார் அதன் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி. இதுகுறித்து ராஜ்குமார் ஹிரானி கூறுகையில், ஆமாம், 3-இடியட்ஸ் படத்தின் பார்ட்-2-வை இயக்கும் எண்ணம் இருக்கிறது. ஆனால் அது இப்போது சாத்தியமில்லை இன்னும் கொஞ்சம் நாளாகும் என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி