சென்னை:-இயக்குனர் பாலசந்தருக்கு சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பாலச்சந்தருக்கு உடனடியாக மருத்துவ பரிசோதனைகள் நடந்தன.
அப்போது, அவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பது தெரியவந்தது. வயோதிகக் காரணமாக சோர்வாகவும் இருந்தார். இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் வைத்து பாலச்சந்தருக்கு தீவிர சிசிக்சை அளிக்கப்பட்டது. செயற்கை சுவாசமும் பொருத்தப்பட்டது. தொடர் சிகிச்சை அளித்தும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. கவலைக்கிடமான நிலையிலேயே இருக்கிறார்.
நேற்று அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டது. உடல் நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். உடல் நிலை மோசமடைந்ததை தொடர்ந்து பாலச்சந்தரை பார்ப்பதற்கு பார்வையாளர்கள் இன்று அனுமதிக்கப்படவில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி